மழையால் வீடு இடிந்தது
புளியங்குடியில் மழையால ்வீடு இடிந்தது
தென்காசி
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் இந்திரா காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்த திலகா என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் புளியங்குடி நகரசபை தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி திலகா குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
மேலும் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித்தர வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி புளியங்குடி நகரசபை ஆணையாளர் சுகந்தியிடம் பரிந்துரை செய்தார். நகரசபை துணைத்தலைவர் அந்தோணிசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story