வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை
கீரனூர் என்.சி.ஓ. காலனியில் வாடகை குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் யாகப்பா (வயது 50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நேற்று சமையல் செய்து கொண்டிருந்த போது எண்ணெய் சட்டியில் தீப்பிடித்தது. அப்போது தண்ணீர் கொண்டு தீயை அணைத்த போது தீ வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, டி.வி. பீரோவில் இருந்த பொருட்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story