சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சண்டிகார் மேயர் தேர்தல் முடிவுகள் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சண்டிகார் மேயர் தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சண்டிகார் மேயர் தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 142-இன்கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது.
2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பா.ஜ.க.வின் தகிடுதத்தங்களுக்குத் தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.