முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x

புதுக்கோட்டையில் முப்பெரும் விழா நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

புதுக்கோட்டையில் மரம் வரம் நண்பர்கள், புனித வளனார் ஆலய நண்பர்கள், கலாம் நண்பர்கள் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம், மரக்கன்று வழங்கும் விழா, கண்தான விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடத்தியது. மரம் வரம் நண்பர்கள் நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை ராமன் தலைமை தாங்கினார்.

பெஜான்சிங் மருத்துவமனை சார்பில் நடந்த இந்த விழாவில் புதுக்கோட்டை பங்குத்தந்தை ரூபர்ட், அருட்தந்தை லாரன்ஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், அக்னிகுமார், அருண்குமார், வார்டு உறுப்பினர் மீனாட்சி விஜி, தூத்துக்குடி ரத்னா ஏஜென்சி தர்மராஜ் உள்பட பலர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தோணி முத்து, கிளாஸ்டன் ஸ்டோனி, சிவகார்த்திகேயன், லட்சுமண குமார், ஈஸ்வரமூர்த்தி, அருண் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் ஆதியின் வேரைத் தேடி புத்தகம், கம்மங்கஞ்சி உணவு வழங்கப்பட்டது.


Next Story