தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்


தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்
x

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூகத்தில் மருத்துவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நோயாளிகளின் நல்வாழ்வுக்காக மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவ அறிவியலை நன்கு புரிந்து கொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவர்களின் பங்களிப்பையும் அயராத முயற்சியையும் யாரும் மறக்க முடியாது. கொரோனா பரவலுக்கு மத்தியில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல உயிர்களை காப்பாற்றினார்கள். தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, அவர்கள் தேசத்திற்கு சேவை செய்வதில் முழு கவனம் செலுத்தினார்கள். மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். கடவுளுக்கு இணையாக போற்றப்படும் மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story