தீக்குளிக்க முயன்ற பெண்


தீக்குளிக்க முயன்ற பெண்
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த ரூபாவதி (வயது 38) என்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து மீட்டனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story