கடை தீப்பற்றி எரிந்ததில் பழங்கள் நாசம்
கடை தீப்பற்றி எரிந்ததில் பழங்கள் நாசமானது.
அரியலூர் பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் மாவட்ட நூலகத்திற்கு பின்புறம் உள்ள ஒரு பழக்கடையை கருப்பையா என்பவர் நடத்தி வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் அவரது கடையில் இருந்து புகை வருவதை பார்த்த பயணிகள், இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையின் கதவை திறந்து பார்த்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, திராட்சை போன்ற பழங்களும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பூக்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.