முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் தடையின்றி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் தடையின்றி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் தடையின்றி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

மாணவர்கள் தடையின்றி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

காரைக்குடி நகராட்சி பகுதியில் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக்கான புதிய கட்டிடம் மற்றும் செட்டிநாடு கால்நடை பண்ணையில் கோழி குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலைக்கான புதிய கட்டிடம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எண்ணற்ற திட்டங்கள்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் காரைக்குடி சீர்மரபினர் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கான புதிய கட்டிடம் ரூ.4.33 கோடி மதிப்பில் அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கல்வியை மாணவர்கள் தடையின்றி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செட்டிநாடு கால்நடை பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை கோழி குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை ஆகியவற்றிற்காக ரூ.8.05 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தோழனாக இருந்து வரும் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, செயல் அலுவலர் ரமேஷ்பாபு, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story