வனப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டது


வனப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி பீட் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ பற்றி எரிந்தது. வெயில் தாக்கத்தால் காய்ந்து கிடந்த இலை சருகுகளில் பரவி மளமளவென எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், செடி கொடிகளை வைத்து தீயை போராடி அணைத்தனர்.




Next Story