கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி - குதுகலத்தில் சுற்றுலா பயணிகள்


கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி - குதுகலத்தில் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Jun 2022 9:11 AM IST (Updated: 14 Jun 2022 9:12 AM IST)
t-max-icont-min-icon

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தேனி:

தேனி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story