விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், பஞ்சாயத்தில் அனுமதி பெறாமல் காற்றாலைகளை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story