கடலூர் கேப்பர்மலை மின்வாரிய அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


கடலூர் கேப்பர்மலை மின்வாரிய அலுவலகம் முன்பு  விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கேப்பர்மலை மின்வாரிய அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை விவசாயம் முன்னேற்ற கழகம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செயலாளர் பாலு தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ராசாமணி, பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

போராட்டமானது, தொடர் மின்வெட்டால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பெருத்த இழப்பு ஏற்படுகிறது. இதை தடுத்தி நிறுத்திட தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும், பாதிப்புக்கு உள்ளான மின்மாற்றியை சீரமைக்க விவசாயகளிடமே பணம் வசூலிப்பதை கண்டிப்பது, மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக அளவு அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் குறிப்பாக பள்ளி குழந்தைகள் படிப்பை சரிவர தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, எனவே மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story