காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு குடோனின் உரிமையாளகளில் ஒருவரான சுதர்சனுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் பலியாகினர்.

இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story