எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்


எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்
x

நாமக்கல் அருகே வீட்டில் சார்ஜ் செய்தபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளது பெரியூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.1 லட்சம் செலுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தினர், அந்த ஸ்கூட்டருக்கு புதிய ரக பேட்டரி ஒன்றை பொருத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தங்கவேல் தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்து உள்ளார். நள்ளிரவு திடீரென சார்ஜ் ஆகி கொண்டிருந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் தங்கவேலுவுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

தீப்பிடித்து எரிந்து சேதம்

இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதமானது. கடந்த ஓராண்டாக எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் 4 நாட்களுக்கு முன்பு புதிய ரக பேட்டரி மாற்றிய நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக தங்கவேல் தெரிவித்தார். இந்த தீவிபத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் அங்கிருந்த பொருட்கள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story