மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

பொக்லைன் எந்திர டிரைவர்

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு நெல்லிமூடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 33), பொக்லைன் எந்திர டிரைவர். இவருக்கு அஸ்வதி (28) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விக்னேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து அவரது நண்பரான பேரை பகுதிைய சேர்ந்த அஜின்(29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

தவறி விழுந்து சாவு

மோட்டார் சைக்கிளை அஜின் ஓட்டினார். விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. மூப்புவிளை பகுதியில் சென்றபோது திடீரென அஜின் பிரேக்கை போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விக்னேசின் மனைவி அஸ்வதி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story