இல்லம் தேடி கல்வி மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
இல்லம் தேடி கல்வி மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தனர்.
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் குடியிருப்பு பகுதியில் இல்லம் தேடி கல்வி மையம் உள்ளது. இந்த மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தன்னார்வலர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், இல்லம் தேடி கல்வி மையம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். தன்னார்வலர்கள் மாணவர்களின் வருகை பதிவை தினமும் இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் தன்னார்வலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் அவர்கள் பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களை சந்தித்து மாணவர்களின் கற்றல் நிலைகுறித்து உரையாட வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா, தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.