நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு


நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு
x

2023-24-ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் பதிவுசெய்யபும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

2023-24-ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் பதிவுசெய்யபும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில்:-

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர 2022-2023 ம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை மூலம் கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வானது தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் இல்லாமல், பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது.

மே மாதம் நடக்கிறது

அதன் பேரில் 2023-ம் கல்வியாண்டில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் 34 ஆயிரத்து 555 பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளது.

அந்த வகையில் 2023-2024 ம் கல்வியாண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இந்த பொது நுழைவுத்தேர்வுக்கு அதிகாரப்பூர்வமான https://cuet.samarth.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். அதில் கல்வி சான்றிதழ், இருப்பிடச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் தேர்வு எழுத காத்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிந்த பிறகு தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வில் பங்கு பெற விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வுக்கான அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆன்லைனில் மட்டுமே...

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு புதிய கல்வி அமர்வு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். எனவே மாணவ, மாணவிகள் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். 500 நகரங்களில் நடக்கும் முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது.

சேவை மையத்தில்...

முதலில் வருபவர்களுக்கு மாணவர் விடுதி சேவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தகுதி உள்ளிட்ட திட்ட விவரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் சந்தேகம் இருப்பின் 94424 88406, admisson@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்கு நேரில் வருகை புரிந்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


Next Story