பயணிகள் நிழற்குடையில் பிணமாக கிடந்த தொழிலாளி


பயணிகள் நிழற்குடையில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

வேடசந்தூர் ஆத்துமேடு பயணிகள் நிழற்குடையில் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் ஆத்துமேடு நால்ரோட்டில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்கு 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர், வேடசந்தூரை அடுத்த குன்னம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி திருப்பதிசாமி (வயது 60) என்று தெரியவந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இவர், பயணிகள் நிழற்குடையில் தங்கியிருந்து அந்த வழியாக செல்வோர் கொடுக்கிற உணவை சாப்பிட்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட திருப்பதிசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.


Next Story