காதல் கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை


காதல் கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே காதல் கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கியதாக கணவருடன் சேர்ந்து என்ஜினீயரிங் மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலூர்

விருத்தாசலம் அருகே உள்ள வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 20). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவர் அதே ஊரை சேர்ந்த மர வியாபாரி கார்த்திகேயன் (26) என்பவரை காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டார். நேற்று ஆனந்தி காதல் கணவருடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், கார்த்திகேயனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 10.2.2023 அன்று காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இதனால் நாங்கள் ஊரில் வசிக்க கணவரின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஊரில் உள்ள 2 கோவில்களுக்கும் வரக்கூடாது என்று தடுக்கின்றனர். மேலும் எங்கள் பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து முந்திரி கொட்டை எடுப்பதற்காக எனது கணவர் குடும்பத்தாரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். ஆனால் என்னை திருமணம் செய்த பிறகு எனது குடும்பத்தினருக்கு உள்ள பங்கு உரிமையை அவர்கள் தர மறுக்கிறார்கள். யாரும் எங்களிடம் பேசக்கூடாது. எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆபாசமாக பேசி வீண் பிரச்சினை செய்து வருகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story