மின்னல் தாக்கி பசுமாடு செத்தது


மின்னல் தாக்கி பசுமாடு செத்தது
x

கல்வராயன்மலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு செத்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மேலாத்துக்குழி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவருக்கு சொந்தமான பசுமாடு பரிதாபமாக செத்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story