2 கி.மீட்டர் தூரம் ஆட்டோவின் பின் ஓடிய பசு


2 கி.மீட்டர் தூரம் ஆட்டோவின் பின் ஓடிய பசு
x

2 கி.மீட்டர் தூரம் ஆட்டோவின் பின் ஓடிய பசு

நாகப்பட்டினம்

நாகையில், கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் எடுத்து சென்றதால் 2 கி.மீட்டர் தூரம் ஆட்டோவின் பின் பசு ஓடி சென்றது.

மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த பாசப்போராட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

மேய்ச்சலுக்கு சென்றது

நாகை, வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது வீட்டில் ஒரு பசுமாட்டை வளர்த்து வந்தார். தற்போது சினையாக இருந்த இந்த பசு கன்று ஈனும் தருவாயில் இருந்தது. பசுவை கணேசன் குடும்பத்தினர் மிகவும் அக்கறையுடன் கவனித்து வந்தனர். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த பசு மேய்சலுக்காக வெளியே சென்றது. இதன்பின் பசு வீடு திரும்பவில்லை. இதனால் கணேசன் குடும்பத்தினர் பசுைவ பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆட்டோவில் ஏற்றினார்

இந்தநிலையில் நாகை புதிய கடற்கரை சாலை அருகே ஒரு பசு கன்று ஈன்ற நிலையில் நிற்பதாக கணேசனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அந்த பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கன்றுடன் இருந்த தனது பசுவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த கணேசன் நடக்க முடியாமல் இருந்த கன்றை மட்டும் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனது வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்தார். ஆனால் தனது கன்றை எங்கோ தூக்கி செல்கிறார்கள் என கருதிய பசு, கன்றை தூக்கி செல்ல விடாமல் முன்னும் பின்னும் ஆட்டோவை சுற்றி வந்தது.

நெகிழ்ச்சி

இதன் பின் ஒரு வழியாக சமாளித்து கன்றுக்குட்டியை ஆட்டோவில் ஏற்றிய உரிமையாளர் வெளிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு கன்றுக்குட்டியை கொண்டு சென்றாா். அப்போது ஆட்டோவை விடாமல் தாய்பசு சத்தம் எழுப்பியபடி தூரத்தி ெசன்றது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நாகை நகர வீதி வழியாக 2 கி.மீட்டர் தூரம் ஆட்டோவின் பின் பசுமாடு ஓடி சென்றதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்தனர். ஒரு கட்டத்தில் வேகமாக துரத்தி சென்று ஆட்டோவை பசுமாடு மறித்து நின்றது.

இதைக்கண்ட மாட்டின் உாிமையாளர் ஆட்டோவை சற்று வேகக்குறைவாக இயக்க கூறினார். இதன் பின் பசுவும் அதன் கன்றும் பத்திரமாக உரிமையாளாின் வீட்டை அடைந்தன. கன்றை கொண்டு சென்ற ஆட்டோவின் பின்புறம் பசுமாடு ஓடி சென்று நடத்திய பாசப்போராட்டம் அப்பகுதி மக்களின் மனதை நெகிழச்செய்தது.


Related Tags :
Next Story