சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்த கவுன்சிலர்
கொல்லங்கோட்டில் சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது
கொல்லங்கோடு,
கொல்லங்கோட்டில் சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
சாைலயில் தேங்கும் மழைநீர்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொல்லங்கோடு நகராட்சியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முக்கிய சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் நீந்திய படி சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி-கல்லூரிகளுக்கும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
நூதன போராட்டம்
இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் தூத்தூர் ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஜோஸ்பில்பின் ேநற்று சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் நீச்சல் அடித்தப்படி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். மேலும் ஏ.வி.எம். கால்வாைய தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சாலையில் தேங்கும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால் தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.