நிறைவுபெறும் பவள விழா.. 'கழகக்கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து தமிழ் மக்களின் உணர்வோடு கலந்திட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவடைகிறது. இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கலைஞரின் உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும், 'இல்லந்தோறும் கழகக் கொடி'-யை ஏற்றிட வேண்டுமென கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தந்தைப் பெரியாரின் கொள்கைகளை – பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களை – முத்தமிழறிஞர் கலைஞர் தந்த முழக்கங்களை, கழகத் தலைவரின் வழிகாட்டலில் இன்னும் வலிமையோடு உயர்த்திப் பிடித்திட கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம்.
பழையக் கொடிக்கம்பங்களை புதுப்பித்து, கழகத்தின் மூத்த முன்னோடிகளைக் கொண்டு கழகக்கொடி ஏற்றுவதோடு, அலுவலகங்கள் – வணிக வளாகங்கள் என நம் கழக உடன்பிறப்புகளுக்கு சொந்தமான அத்தனை இடங்களிலும் கறுப்பு – சிவப்புக் கொடி உயரப் பறக்கட்டும். கழகம் என்றும் வெல்லட்டும்!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.