இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், வேலையின்மை அதிகரிப்பு, மணிப்பூர் மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த மதக்கலவரம், பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது, இந்தி திணிப்பு, ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

43 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் இடும்பையன், கணபதி, மனோன்ராஜ் மற்றும் 12 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் அழைத்து சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story