இளையான்குடியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்


இளையான்குடியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:30 AM IST (Updated: 22 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பனை விதைகள்

இளையான்குடி பசுமை திட்டம் சார்பாக சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் முயற்சியின்பேரில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் பனை விதையை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளையான்குடி தாசில்தார் கோபிநாத், இளையான்குடி நீர் பாசன கண்மாய் பாசன கமிட்டி தலைவர் அபூபக்கர் மற்றும் நீர்ப்பாசன கமிட்டி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நீர்நிலைகளில்

பனை விதைகளை ஒரு மாத காலத்திற்குள் நட்டு பணியினை நிறைவு செய்யவும், சிவகங்கை மாவட்ட நீர் நிலைகள், குளம், குட்டைகள் ஓரங்களில் நடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பசுமை சாம்பியன் பட்டம் பெற்ற சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் இளையான்குடி பகுதியில் உள்ள நீர் பாசன கண்மாய்கள் மற்றும் ஊருணிகள், குளம், குட்டைகளில் பனை விதைகளை நடவு செய்யும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


Next Story