கிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார்
கிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார் என்று லட்சுமணன் எம்.எல்.ஏ. கூறினார்.
விழுப்புரம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோவில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில்விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் கலந்துகொண்டு, கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது முத்தாம்பாளையம் ஏரியை தூர்வார வேண்டும், அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். பின்னர் அவர் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாடு முன்னேற வேண்டும், கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு, நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்டஎண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.
கூட்டத்தில் கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ராஜேந்திரன், ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், கவுன்சிலர் சிட்டிபாபு, மாவட்ட பிரதிநிதி சங்கர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனுசுநாதன், வார்டு உறுப்பினர்கள் தெய்வநாயகம், சபரிநாதன், சம்பத், ராஜேஷ், சுரேஷ், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், நாகராஜ், முத்துக்குமரன், மணி, வெற்றி உள்பட பலர் கலந்துகொண்டனர்.