'அமைச்சர்களை மாற்றவும், நியமிக்கவும் முதல்-அமைச்சருக்கு உரிமை உள்ளது' - கே.எஸ்.அழகிரி


அமைச்சர்களை மாற்றவும், நியமிக்கவும் முதல்-அமைச்சருக்கு உரிமை உள்ளது - கே.எஸ்.அழகிரி
x

முதல்-அமைச்சருக்கு தன்னுடைய அமைச்சர்களை மாற்றுவதற்கும், நியமிப்பதற்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய அமைச்சரவை பரிந்துரைகளை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மாநில அரசின் கவர்னர் ஏற்றுக்கொண்டால் தான் ஆச்சரியப்பட வேண்டுமே தவிர, அவர் அதை திருப்பி அனுப்பினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஏனெனில் அவர் அதைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறார். மோடி அரசாங்கம் அவருக்கு என்ன சொல்லி அனுப்பினர்களா அதன்படி அவர் செய்து கொண்டிருக்கிறார். அவராகவே எதையும் செய்யவில்லை.

இது ஒரு கூட்டாட்சி முறை. ஒரு முதல்-அமைச்சருக்கு தன்னுடைய அமைச்சர்களை மாற்றுவதற்கும், நியமிப்பதற்கும் எல்லா உரிமைகளும் உண்டு. கவர்னரிடம் மரபு கருதி தான் கையெழுத்து கேட்கப்படுகிறது. கவர்னர் இதுபோல் தொடர்ந்து செய்தால், இனி அவரது ஒப்புதல் இல்லமலேயே இவற்றையெல்லாம் செய்து கொள்ள முதல்-அமைச்சரால் முடியும். உங்களால் முதல்-அமைச்சரை ஒன்றும் செய்துவிட முடியாது."

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.



Next Story