" 'ஸ்ரீமதி தற்கொலை' என்ற கோணத்திலேயே சிபிசிஐடி போலீசார் விசாரணை" - ஸ்ரீமதியின் தாயார் பகீர் குற்றச்சாட்டு
ஸ்ரீமதி வழக்கில், தங்களின் கருத்துக்களை சிபிசிஐடி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே, சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் ஸ்ரீமதியின் தாய் செல்வி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வந்தபோது, அவரால் சந்திக்க இயலவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ரீமதி வழக்கில், தங்களின் கருத்துக்களை சிபிசிஐடி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்றும், எனவே நியாயமான முறையில் விசாரணை நடத்த ஏதுவாக, வேறொரு நேர்மையான அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story