அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கு - மேலும் ஒருவர் கைது..!


அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
x

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் ஒருவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி செருப்பு வீசி எறிந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். மேலும் 21 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரை எச்.எம் எஸ் காலணியை சேர்ந்த வினோத் குமார் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story