கண்ணகி சிலை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
கண்ணகி சிலை அருகே வரும்போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்,டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை மெரினா கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த காரை இதயதுல்லா என்பவர் ஓட்டி வந்தார்.அப்போது காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே வரும் போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து முழுவதும் நாசமானது.டிரைவர் உடனே கரை விட்டு இறங்கி ஓடி உயிர்தப்பினார்.சாலையில் சென்றவர்களும் கார் தீப்பற்றி எரிவதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடுபோல் ஆகிவிட்டது. துரிதமாக செயல்பட்டதால் டிரைவர் இதயதுல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இது தொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.