கார் திடீரென தீப்பற்றி எரிந்தது
ராதாபுரம் அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே கணபதி நகரில் நான்கு சக்கர வாகன ஒர்க்ஷாப் ஒன்று உள்ளது. அங்கு நேற்று ஒரு காரை ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் மற்றும் மண்ணை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story