50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அஜ்ஜுர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 53). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவகுமார் ஓட்டினார். அரவேனு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story