தொழிலதிபர், போலீசாரிடம் நகை-பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட திருநங்கை


தொழிலதிபர், போலீசாரிடம் நகை-பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட திருநங்கை
x

தொழிலதிபர், போலீசாரிடம் நகை-பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்ட திருநங்கையை கைது செய்ய கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

தொழிலதிபர், போலீசாரிடம் நகை-பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்ட திருநங்கையை கைது செய்ய கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

உடுமலையை சேர்ந்த திருநங்கை ஒருவர் சினிமா துறையில் இருப்பதாகவும், குறும்படம் எடுப்பதாகவும் கூறி திருமணம் செய்வது போல் குறும்படம் எடுத்து அவர்களது குடும்பத்திற்கு இந்த திருமண காட்சியை அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவைகளை மிரட்டி வாங்கியுள்ளார்.

இந்த திருநங்கை உடுமலையை சேர்ந்த சகோதரர்கள், தென்காசியை சேர்ந்த தொழில் அதிபர், 6 போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 16-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.5 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ரூ.10 லட்சத்தை ஏமாற்றினார்

மேலும் திருச்சி கே.கே.நகரில் வெற்றிச்செல்வி என்ற மூதாட்டிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி ரூ.28 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி தொகை ரூ.10 லட்சத்தை தராமல் ஏமாற்றி உள்ளார். எனவே அந்த திருநங்கையை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story