குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், 5 கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், 5 கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோரிக்கை மனு

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கம், இளவங்கார்குடி, பெரும்புகளூர், வண்டம்பாளை மற்றும் நீலக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் இருந்து பெரும்புகளூர் வரை செல்லும் சாலையை இளவங்கார்குடி, நீலக்குடி, வண்டம்பாளை, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

இந்த பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், நோயாளிகள், வயதானவர்கள் இந்த சாலை வழியாக கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம்

அப்போது கிராம மக்கள் கூறுகையில், இந்த சாலையினை உடனடியாக தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story