மின்கம்பி அறுந்து விழுந்து எருமை செத்தது


மின்கம்பி அறுந்து விழுந்து எருமை செத்தது
x

மோகனூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து எருமை செத்தது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது வீட்டில் எருமைகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் அவர் எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த பகுதியின் மேலே சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து ஒரு எருமை மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி எருமை பரிதாபமாக இறந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலப்பட்டி மின்வாரிய பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து மழைக்காலங்களில் மின் கம்பங்களில் மாடுகள் கட்டுவது, அதன் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரிய பணியாளர்கள் அறிவுறுத்தினர். மின் கம்பி அறுந்து விழுந்து எருமை இறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story