ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி
கே.மோட்டூரில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் குண்டலபட்டி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கால்வாய் குறுக்கே ரூ.25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், மாவட்ட பிரதிநிதி கணேசன், நகர செயலாளர் விமல், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் மகேஸ்வரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story