சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்த வாலிபர்


சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்த வாலிபர்
x

அரக்கோணம் அருகே சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் கோபி (வயது 30). இவர் பக்கத்து தெருவில் உள்ள 12 வயது சிறுவனிடம் சிகரெட் வாங்கி வர கூறியதாக தெரிகிறது. அதற்கு சிறுவன் மறுத்துவிட்டு விளையாட சென்றுள்ளான். விளையாடிய பின்னர், சிறுவன் வீட்டுக்கு திரும்பியபோது கோபி சிறுவனின் கையை பிளேடால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் சொட்டிய நிலையில் வலியால் அலறி துடித்த சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சிறுவனின் தாய் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் கையை அறுத்து விட்டு தப்பி ஓடிய கோபியை தேடி வருகின்றனர்.


Next Story