வெள்ளமடம் அருகே ஓடையில் தொழிலாளி பிணம்
வெள்ளமடம் அருகேஓடையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி:
வெள்ளமடம் அருகே தேரேகால்புதூர் சந்திப்பில் சாலையையொட்டி உள்ள ஓடையில் செடி, கொடிகளுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் ஏட்டு விஜய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் புது கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன் (45)என்பது தெரியவந்தது. தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி எப்படி இறந்தார்? என தெரியவில்லை. மேலும் ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story