தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

பாலத்தில் பக்கவாட்டு சுவர்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணக்கரை மேலூர் கிளை செயலாளர் சித்திரைவேல், மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமம் மேலூரில் மருதூர் கீழக்காலில் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் பக்கவாட்டு சுவர்கள் கட்டப்படாமல் உள்ளது. எனவே, விரைந்து பக்கவாட்டு சுவர்கள் கட்ட வேண்டும். உழவு எந்திரங்களை சுத்தம் செய்வதற்கும், கால்நடைகளை சுத்தம் செய்வதற்கும் வசதியாக வாய்க்காலில் கற்களால் ஆன சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ் அந்தோணிகுமார் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாசரேத் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

தூத்துக்குடி மேற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பஞ்சாயத்து சோரீஸ்புரம், மாதவன்நகர், பொன்னகரம், இந்திரா காலனி, சுப்பிரமணியபுரம், சண்முகபுரம், கைலாசபுரம், சிவசக்திநகர் உள்ளிட்ட கிராமங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவசர மருத்துவ உதவிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அய்யனடைப்பு பஞ்சாயத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோகிலா தலைமையில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரசல் மற்றும் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களுக்கு செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000 அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். பணி நேரம் வரையறை செய்ய வேண்டும். காலதாமம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும். கவுரவமான பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் 12 அடி அகல சாலை அமைந்து இருந்தது. இந்த சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் பாதை அகலம் குறைந்து விட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதில் கழிவுநீரும் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகையால் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story