விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இரையுமன்துறையில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இரையுமன்துறை படகு இறங்குதளத்தில் ஏராளமான விசைபடகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகையும் படகு இறங்குதளத்தில் நிறுத்தி வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் படகில் வெல்டிங் வேலை செய்துவிட்டு மாலையில் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் படகில் முன்பக்க வாய் பகுதியில் வெல்டிங் செய்ததில் ஏற்பட்ட தீக்கனல் இரவு முழுவதும் மெல்ல மெல்ல எரியத்தொடங்கி காலையில் முன்பக்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. இதை அங்கு பணியில் இருந்த துறைமுக காவலாளி பார்த்து, ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தார். ஸ்டாலின் சக மீனவர்களின் உதவியுடன் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்து படகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த தீ அருகில் நிறுத்தியிருந்த படகுகளில் பரவாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story