போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை


போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
x

போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

கஞ்சா விற்பனை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழரசன், கண்ணன் உள்ளிட்டோர் ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில் குமாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கஞ்சா வழக்கில் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் அசையும், அசையா சொத்துக்களுடன் ஆதார், நிரந்தர கணக்கு எண் இணைக்கப்பட்டு வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் மற்றும் அரசு எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். குறிப்பாக தென்மண்டல ஐஜியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்த நீதிபதி மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story