பெண்ணை கடத்த வந்த 4 பேருக்கு தர்மஅடி


பெண்ணை கடத்த வந்த 4 பேருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 19 April 2023 12:30 AM IST (Updated: 19 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே பெண்ணை கடத்த வந்த 4 பேருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி 4 பேர் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த கிராம மக்கள் நேற்று காலையில் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர்களுடன் வேலை பார்க்கும் நண்பருக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க கடத்திச் செல்ல வந்ததாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக யாரும் புகார் செய்யாததால், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


Related Tags :
Next Story