Normal
தட்டப்பாறை கெங்கையம்மன் திருவிழா
தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.
வேலூர்
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. அம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. தொடர்ந்து கோவிலில் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர்.
நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், தட்டப்பாறை மற்றும் சின்னப்பல்லி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story