தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 14 Sept 2023 12:30 AM IST (Updated: 14 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி நாடார் மேலத் தெருவில் உள்ள தங்க மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு மாலையில் கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் மகா கணபதி, மகாலட்சுமி, சுதர்சனா, துர்கா, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் தங்க மாரியம்மன், செல்வ விநாயகர், கன்னி விநாயகர், பாமா ருக்மணி சமேதகிருஷ்ணசுவாமி ஆகிய கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் உள்பட 21 வகையான நறுமண பொருட்களால் தங்க மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சிவகிரி மேலத்தெரு நாடார் உறவின் முறை தலைவர் ராஜகுரு, செயலாளர் மாடசாமி, கும்பாபிஷேக குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


Next Story