விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் நூலகம்' இன்று திறப்பு


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் இன்று திறப்பு
x
தினத்தந்தி 18 Nov 2023 8:07 AM IST (Updated: 18 Nov 2023 8:13 AM IST)
t-max-icont-min-icon

இரண்டாம் கட்டமாக வருகின்ற வியாழக்கிழமை 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

சென்னை,

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் நூலகம்' இன்று திறக்கப்படுகிறது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூறும்போது,

"தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக 'தளபதி விஜய் நூலகம்' திட்டம் சனிக்கிழமை (இன்று) காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் துவக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தளபதி விஜய் நூலகம் திட்டம் துவக்கப்படவுள்ளது.

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற (23/11/2023) வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story