தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்


தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்
x

தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்

நாகப்பட்டினம்

தலைஞாயிறு வணிகர் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா தலைஞாயிறு அக்ரஹாரம் தெருவில் உள்ள வணிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாதவன் வரவேற்றார். வணிகர் சங்கத்தலைவர் அச்சகம் அன்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் செல்வரத்தினம், கவுரவ தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராமஜெயம், வளர்ச்சி குழு தலைவர்கள் சிவப்பிரகாசம், கல்யாணசுந்தரம், காசிலிங்கம், செல்வகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 14 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. எனவே தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவித்து, புதிய தாலுகா உருவாக்க வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் பேரூராட்சி சார்பில் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட வணிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story