தக்கோலம் பேரூராட்சி கூட்டம்


தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
x

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் திட்டமான பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் 4 பள்ளிகளில் செயல்படுத்திடவும், பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கோடை காலத்தினை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் முன் தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். இதில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர், பேரூராட்சி பணியாளர்கள உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story