தக்கோலம் பேரூராட்சி கூட்டம்


தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
x

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கோமளா ஜெயகாந்தன், செயல் அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பூங்காவிற்கு "கலைஞர் நூற்றூண்டு நினைவு பூங்கா" என பெயர் வைக்க வேண்டும். கொசு மருந்து அடிக்கும் கருவி வாங்க வேண்டும். இருளர் பகுதி, காந்தி நகர் பகுதிகளில் சமுதாய கூடம் மற்றும் புதிய பூங்கா அமைக்க வேண்டும். சிறப்பு ஆதார் திருத்த முகாம்கள் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.


Next Story