உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் - சபாநாயகர் அப்பாவு வடம்பிடித்து தொடங்கி வைத்தார்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரோட்டம் வடம்பிடித்து இழுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சுவாமி சந்திரசேகரர்-மனோன் மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய ரதவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் முருகேசன், துணைத்தலைவர் கனக லிங்கம், நிர்வாகிகள் ராஜாமணி, சுடலைமூர்த்தி, செண்பகவேல், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.