அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்
செங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலுார் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமையா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தங்கம், துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றனார். அதனை தொடா்ந்து செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், நகர்மன்ற உறுப்பினர்கள் இசக்கிதுரை பாண்டியன், பேபி ரெசவுபாத்திமா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர துணைச் செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, சுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் சண்முகராஜா, இப்ராகிம், சேட் என்ற சேக் மதார், வேலுமணி, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.